‘ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்’.. ‘இரு பெண்களும் சொல்லிய ஒரே பதில்’.. அதிர்ந்து போன போலிஸார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 06, 2019 01:35 PM

ஆட்டோ டிரைவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Auto driver marries two women in Tirupur

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுக்கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29 - தேதி அப்பெண் மாயமானர். இதனால் அப்பெண்ணின் தந்தை மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனை அடுத்து தாராபுரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ டிரைவருடன் அப்பெண் இருந்ததை பார்த்த போலிஸார் இருவரையும் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் மற்றொரு பெண் இருந்ததை பார்த்து போலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து மூவரையும் விசாரணை செய்ததில் ஆட்டோ டிரைவர் இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் பழனியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியான போலிஸார் இரண்டு பெண்கள் வீட்டிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். போலிஸாரும், பெற்றோரும் மாறிமாறி பேசிப்பார்த்தும் இரண்டு பெண்களும் ஆட்டோ டிரைவருடன்தான் வாழப்போவதாக பிடிவாதமாக கூறியுள்ளனர்.

இதனால் செய்வதறியாது இருந்த போலிஸார் கடைசியில் ஆட்டோ டிரைவருடன் இரு பெண்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஒரு பெண் ஏற்கனவே திருமணம் செய்து கணவரை இழந்தவர் குறிப்பிடத்தக்கது.

Tags : #TIRUPPUR #AUTODRIVER #MARRIAGE