தனக்கு திருமணம் செய்துவைத்த புரோகிதருடன் ஓடிச்சென்ற பெண்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 29, 2019 06:29 PM

கடந்த 23-ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் ஆசாத் நகரைச் சேர்ந்த வினோத் மராஜ் என்கிற புரோகிதர், ஒரு திருமணத்தை புரோகிதம் பண்ணி நடத்தி வைக்க புக் ஆகியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரை திருமண நாளன்று காணவில்லை என்று அவரை ஒப்பந்தம் செய்த திருமண வீட்டார் தேடியுள்ளனர்.

bride elopes with priest who performed her marriage

எனினும் வினோத் மகராஜ் கிடைக்கவில்லை. அவரைப் பற்றி அவரின் எரியாவில் விசாரித்தபோது, வினோத் மகராஜ் பற்றிய ஒரு உண்மை தெரியவந்ததை அடுத்து, இந்த திருமண வீட்டாருக்கு தூக்குவாரிப்போட்டது. ஆம், புரோகிதர் வினோத் மகராஜ், கடந்த மே 7 ஆம் தேதி தான்,  ஒரு திருமணத்தை புரோகிதம் பண்ணி செய்துவைத்துள்ளார்.

அந்த திருமணத்தை செய்துகொண்ட மணப்பெண்ணும், தான் திருமணமாகிச் சென்ற மாப்பிள்ளையின் வீட்டில் இருந்து, திருமணமாகிய 3 நாட்களுக்குள் வெளிவந்துள்ளார். பின்னர் அவரும் வினோத் மகராஜூம் காதலித்து, அதன் காரணமாக வீட்டை விட்டு ஓடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த மணப்பெண் செல்லும்போது ரூ1.5 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள், ரூ 30 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு வினோத் மகராஜூடன் ஓடிச்சென்றுள்ளார். கூடுதல் தகவலாக, அந்த பெண் வினோத் மகராஜூடனுடன் தன் குடும்பத்தாரையும் உடன் அழைத்துச் சென்றதும், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

Tags : #PRIEST #MARRIAGE #BRIDE