‘வேறு சமூக இளைஞரை திருமணம் செய்த பெண்ணுக்கு நடந்த பரிதாபம்..’ தந்தையின் செயலால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 10, 2019 04:59 PM

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்துள்ளார்.

father puts abituary banner for daughter in vellore

ஆம்பூரை அடுத்த குப்பராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் அர்ச்சனா அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இது பெற்றோருக்குத் தெரிய வர அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறி காதலித்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மணக் கோலத்தில் இருவரும் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர். இந்த திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை சரவணன் மகள் இறந்து விட்டதாக ஃபிளக்ஸ் பேனர் அடித்து ஊர் முழுவதும் வைத்துள்ளார்.

அந்த பேனரில், “என் அன்பு மகள் அர்ச்சனா 9ஆம் தேதி மதியம் 2 மணியளவில் அகால மரணமடைந்தார். மகளின் உடல் 10ஆம் தேதி குப்பராஜபாளையம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும். இப்படிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தையே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சம்பவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #INTERCAST #MARRIAGE