'செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்'... 'நாங்களும் தட்டிவிடுவோம்ல'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jun 06, 2019 01:04 PM
ஹரியானா மாநில முதலமைச்சர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரை, mஅவரது செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கர்னால் கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு தன்னை நோக்கி கையசைத்தவர்களைப் பார்த்து முதலமைச்சரும் கையை அசைத்தப்படியே வந்தார். பின்னர் தனக்காக விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளத்தில் ரோஜா மலர்களை தூவியபடியே முதலமைச்சர் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரது சிவப்புக் கம்பள பாதையில் குறுக்கே நின்ற இளைஞர் ஒருவர், முதலமைச்சருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தார். தன்னுடன் செல்ஃபி எடுப்பதைக் கண்டு மனோகர் லால் ஆத்திரமடைந்தார். பின் அந்த இளைஞனின் கையைப் பிடித்து ஓரமாக இழுத்துவிட்ட அவர் முறைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH Haryana CM Manohar Lal Khattar pushes aside a man who tries to take a selfie with him, at an event in Karnal. pic.twitter.com/HZK10VWWQy
— ANI (@ANI) June 6, 2019
