அய்யயோ...! 'ஆன்லைன் கிளாஸ் இருக்கே...' 'வீட்ல வேற டவர் சிக்னல் இல்ல...' இப்போ என்ன பண்றது...? - கல்லூரி மாணவியின் 'செம' ஐடியா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆன்லைன் வகுப்பிற்கு தன் வீட்டில் சிக்னல் கிடைக்காததால் மலையில் குடில் அமைத்து படிக்கும் செய்தி வெளியாகி அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

உலகில் கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மறந்து அனைவரும் புது வழக்கங்களுக்கு மாறி வருகின்றனர்.
மேலும் கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான வசதி இல்லாமல் தவித்து வருவதையும் நாம் அறிவோம். இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தன் வீட்டில் இணைய சிக்னல் கிடைக்காததால், ஒரு மலையின் மீது தற்காலிக குடில் ஒன்று அமைத்து தன்னுடைய ஆன்லைன் வகுப்பை தொடர்ந்து வருகிறார்.
ஸ்வப்னாலி கோபிநாத் என்னும் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனது ஆன்லைன் வகுப்பிற்காக தன் வசிக்கும் பகுதியில் இணைய சிக்னல் கிடைக்காததால், தான் வசிக்கும் பகுதியை சுற்றியிருந்த மலையில் சிக்னல் கிடைக்கும் இடத்தை தேர்வு செய்து, அங்கு ஒரு சிறிய குடில் அமைத்துள்ளார். அங்கு தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை படித்துவிட்டு வீடு திரும்புகிறார் ஸ்வப்னாலி.
வனத்துறை அதிகாரி தேவ் பிரகாஷ் மீனா, மாணவி ஸ்வப்னாலி அவர்களின் நிலையை குறித்து அவரின் புகைப்படத்தோடு பகிர்ந்த செய்தி வைரலாகி, ஸ்வப்னாலி தன் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை இது காட்டுவதாக பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
