“பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாரஷ்யாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த கேரள பெண், கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை பயின்று வந்த கிருஷ்ணபிரியா என்கிற இளம் பெண், கடந்த 6 நாட்களுக்கு முன்னர்தான், தனது சொந்த ஊரான கேரளாவின் கோட்டயம் மாவட்டத்துக்கு திரும்பியுள்ளார். ஆனால், வெளிநாட்டில் இருந்து அவர் வந்ததால், 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதற்கென அவரது பெற்றோரும் அவருக்கு தனி வீடு, வசதிகளை செய்துகொடுத்தனர். இந்நிலையில் கிருஷ்ணப் பிரியாவிடம் அவரது பெற்றோர்கள் பேச, போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால், நேரில் சென்று பார்த்தனர். கதவை தட்டி திறக்காத கிருஷ்ணப் பிரியாவின் அறை ஜன்னலை உடைத்து பார்த்தனர்.
அப்போதுதான் கிருஷ்ணப்பிரியா தற்கொலை செய்துகொண்டது கண்டு அதிர்ந்து போயுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணப்பிரியாவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
