கைப்புள்ள...! 'இன்னும் ஏன்டா முழிச்சிட்டு ஆன்லைன் க்ளாஸ்ல இருக்க, தூங்கு...' பாடம் நடத்திட்டு இருக்கிறப்போவே மல்லாக்க படுத்து தூங்கிய மாணவன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சம் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முறை பரவலாக அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
பள்ளி சென்று ஆடி ஓடி படிக்கும் குழந்தைகள் தற்போது தன் வீட்டிலேயே நண்பர்கள் இல்லாமல் தனிமையில் கணினி முன்பு உட்கார்ந்து குறைந்தபட்சம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை கழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆன்லைன் கல்வி மூலம் படிக்கும் போது குழந்தைகளின் சேட்டைகள் குறித்தான பல வீடியோக்களும், புகைப்படங்களும் பரவி வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் குடும்பத்தார் வீட்டுப்பாடம் எழுதும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
இப்போதும் அதேபோல் ஒரு சம்பவம் புகைப்படமாக்கப்பட்டு கிரா மெக்டோவெல் என்பவர் எனது மழலையர் பள்ளியின் மொத்த மனநிலை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜூம் வீடியோ மூலம் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது சிறிது நேரம் கவனித்த மாணவன் நேரம் போக போக அந்த நாற்காலியில் மல்லாக்க படுத்துக்கொண்டான்.
இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் இல்லை என்றாலும் உலக மாணவர்களின் நிலை இதுவாக இருக்ககூடும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
My Kindergartner on a 40 minute video call is a total mood. pic.twitter.com/WE2RHoFZhM
— Kara McDowell pre-order ONE WAY OR ANOTHER (@karajmcdowell) August 7, 2020