ஸ்கூல்ல 'பர்ஸ்ட்' ரேங்க் எடுக்குற பொண்ணுங்க... குடும்ப கஷ்டத்துக்காக 'காய்கறி' வித்து எல்லாம் கஷ்டப்பட்டுச்சு... இப்போ 'உதவி' வீடு தேடி வந்துருக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகள் மீனாவுக்கும், காளிமுத்து என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதியருக்கு 12 வயதில் முருகேஸ்வரி என்ற மகளும், 8 வயதில் விக்னேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் மீனா இறந்து விட்ட நிலையில் குழந்தைகளை பாட்டி மாரியம்மாள் கவனித்து வந்துள்ளார். காளிமுத்து திருப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், தனது மனைவி மீனாவின் மறைவிற்கு பிறகு அவர் தனது பிள்ளைகளுடன் எந்த தொடர்பிலும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
நிலைமை இப்படி இருக்கையில், பாட்டியான மாரியம்மாளுக்கும் உடல்நிலை மோசமாகி விட, காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார் சிறுமி முருகேஸ்வரி. ஆறாம் வகுப்பு படிக்கும் முருகேஸ்வரி, பள்ளி படிப்பிலும் முதலிடம். ஆசிரியர்களின் பாராட்டுக்கு சொந்தக்காரியான முருகேஸ்வரி, குடும்ப சூழ்நிலை காரணமாக முள்ளங்கி மற்றும் கீரை ஆகியவற்றை விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.
மேலும், தம்பியின் வருங்காலத்தையும் கணக்கில் கொண்டு முருகேஸ்வரி காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் இந்த தகவல் அதிகம் பரவ ஆரம்பிக்க திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ கவனத்திற்கு சென்றது. அவர் உடனடியாக சென்று மாணவியை நேரில் சந்தித்து கையில் 10,000 ரூபாய் வழங்கியதுடன் இருவரின் படிப்பு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மார்க்கெட் வியாபாரிகள் மத்தியில் தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு காய்கறி வியாபாரம் செய்த மாணவிக்கு கிடைத்த உதவியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
