VIDEO: “WHATSAPP STATUSல மட்டும் NO நெப்போட்டிசம்!”.. “ஒருத்தன் வீடியோ ஆன் ஆச்சுனா.. இன்னொருத்தன்!”.. ONLINE CLASS பரிதாபங்கள்.. வெளுக்கும் சுட்டிக்குழந்தை.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் வகுப்பை எடுக்கும் ஒரு ஆசிரியை படும் பாட்டினை ஒரு சுட்டிக் குழந்தை அழகாய் நடித்துக்காட்டும் வீடியோ நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

அதில், “ஹலோ.. நான் ஜானகி டீச்சர். ன்லைன் வகுப்பை எடுத்து விரக்தி அடைந்துவிட்டேன். பசங்க வகுப்பை அட்டென் பண்றாங்களோ இல்லையோ, பெற்றோர்கள் தவறாமல் ஆன்லைன் வகுப்பை அட்டென் செய்துவிடுகிறார்கள். குறிப்பாக அம்மாக்கள். நான் எப்போது வகுப்பை தொடங்குகிறேனோ, அப்போதுதான், குழந்தைகளுக்கு உணவூட்டத் தொடங்குகின்றனர் அவர்கள். அது கூட பரவால்ல. ஒரு அம்மா தன் குழந்தைக்கு ஆன்லைன் வகுப்பின்போது பல் துளக்குகிறார். நான் ஹோம் வொர்க்கை காட்டு என்றால், அந்த அம்மா குழந்தையிடம் ஈ காட்ட சொல்றாங்க” என்று கலகலவென்று பேசுகிறார் அந்த சுட்டிக் குழந்தை.
மேலும், நடித்த அக்குழந்தை, “அப்பாக்களை கம்பேர் பண்ணினால். அம்மாக்கள் தேவலாம். ஒரு தந்தை எனது வகுப்பின்போது, குட்டி ஷாட்ஸ் போட்டுக்கொண்டு வருகிறார். அத பாத்ததும் எல்லா கொழந்தைகளும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பசங்க நோட்ஸ் எடுக்குறாங்களோ இல்லயோ,, என் உயிரை நல்லா எடுக்குறாங்க. ஒருத்தன் ஆடியோ ஆன் ஆச்சுனா, இன்னொருத்தன் வீடியோ ஆஃப் ஆயிருச்சுங்குறான்.. ஒருத்தன் வீடியோ ஆன் ஆச்சுனா, இன்னொருத்தன் ஆடியோ ஆஃப் ஆயிருச்சுங்குறான். இன்னொரு விஐபிக்கு ரெண்டுமே அவுட். அவன் பப்ஜி கிப்ஜி விளையாடுறான்னு நல்லா தெரியும். ஆனா அவன் பிரின்ஸிபல் பத்மநாபனோட பையன்.. ஜானகி அவன் வெறும் குழந்தை ஜானகி. குழந்தையா இருக்கவிடுனு சொல்லிடுவார்.. ஆனா அவர் வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ்ல நெப்போட்டிசத்தை ஆதரிக்காதீர்கள். அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணாதீர்கள் என்று வைத்திருப்பார். நல்லாருக்கே அந்த கூத்து!” என்று வெளுத்துக் கட்டுகிறார். வீடியோவில் நீங்களே பாருங்கள்.

மற்ற செய்திகள்
