'பிரியங்காவின் மரணத்துக்கு நீதி!' .. உயிரையே விடத்துணிந்த மக்கள்.. 'ஆவேசம் பொங்கும்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 02, 2019 04:35 PM

கால்நடை மருத்துவர் பிரியங்கா கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.

people assaults police van which carries Priyanka murderers

ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் பகுதியில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தநிலையில், வழக்கம்போல சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச் சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு பேருந்து மூலமாக பணிக்குச் சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தின் டயரை பஞ்சராக்கி வைத்த போதை இளைஞர் கும்பல் லாரியில் வந்து அவருக்கு உதவுவது போல் நடித்து, ஆள் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கழுத்தை நெரித்து கொன்றனர்.

அதன் பின்னர் பிரியங்காவின் உடலை தார்ப்பாயில் சுற்றி கட்டபள்ளி என்கிற பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் வைத்து, சடலத்தை தீயிட்டுக் கொளுத்திவிட்டு தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் செய்த குற்றத்தை உறுதிசெய்த காவல்துறை, இவர்களை கைது செய்து விசாரணைக்காக காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தது. கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் பலரும் பிரியங்காவிற்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். இந்த குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள் என்று பிரியங்காவின் தாயார் ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்நிலையில், பிரியங்காவை எரித்து கொன்ற குற்றவாளிகளை கொண்டு செல்லும் வாகனத்தை இளைஞர்கள் தாக்குவதாகவும், கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞர் தன் உயிரை கூட பொருட்படுத்தாது, குற்றவாளிகளை ஏற்றிச் செல்லும் காவல்துறை வாகனத்தின் முன்னால் படுத்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைக் கொடுக்குமாறு உணர்த்துகிறார்.  இந்த வீடியோ பார்ப்பவர்களை உறைய வைக்கிறது.

 

Tags : #JUSTICEFORPRIYANKAREDDY