VIDEO: 'எல்லாம் அந்த கடவுளுக்காக தான்...' 'தள்ளாத வயசுலையும் கோயிலுக்கு செல்ல...' - 2,200 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் பாட்டி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 68 வயதான பாட்டி ஒருவர் கடவுள் மீது கொண்ட பக்தியால் தனது வீட்டிலிருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சைக்கிளில் தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்து வரும் 68 வயதான ரேகா தேவ்பன்கர் என்னும் பாட்டி கடவுள் மீது கொண்ட அன்பின் காரணமாக தன் தள்ளாத வயதிலும் இறைவனை நேரில் தரிசிக்க தனது வீட்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோயில் வரை சைக்கிளிலேயே பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த கோயிலை அடைய மொத்த தூரம் 2,200 கிமீ ஆகும். கடந்த ஜூலை 24-ம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய பாட்டி தற்போது வரை தினமும் சுமார் 40 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.
ரேகா பாட்டி சைக்கிளில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வயது வெறும் எண்கள் மட்டுமே, ரேகா பாட்டியின் மனவலிமையும் விடா முயற்சியையும் அனைவரும் கற்க வேண்டும் என இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் தங்களின் எதிர்ப்புகளையும் கூறி வருகின்றனர்.
A 68 year old Marathi lady is going to Vaishnodevi on her own, alone, by geared cycle. 2200 km from Khamgaon. Mother's power 🙏💐😇 #MatruShakti pic.twitter.com/TcoOnda2Zg
— Ratan Sharda 🇮🇳 (@RatanSharda55) October 19, 2020