VIDEO : 'பிரியாணி', 'பிரைட் ரைஸ்'ன்னு... ஒண்ணில்ல, ரெண்டில்ல... மொத்தம் '101' 'உணவு' வகைகள்... மருமகளுக்காக சும்மா தரமான 'விருந்து' கொடுத்த 'மாமியார்'... குடுத்து வெச்ச 'பொண்ணு'யா!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமதுரை மாவட்டத்தில் தனது மருமகளுக்காக வீட்டில் 101 வகை உணவு பொருட்களை தயாரித்து வைத்த மாமியார் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
![Madurai women prepares 101 dishes to welcome daughter in law Madurai women prepares 101 dishes to welcome daughter in law](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/madurai-women-prepares-101-dishes-to-welcome-daughter-in-law-1.jpg)
மதுரை மாவட்டத்தை சேர்ந்த அபுல் கலாம் மற்றும் அகிலா அபுல் கலாம் தம்பதியரின் மகனுக்கு கடந்த சில நாடளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, திருமணம் நடத்த கடும் கட்டுப்பாடுகள் அமலிலுள்ள நிலையில், மிகக் குறைவான ஆட்களே திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்த நிலையில், தனது மருமகளுக்கு ஒரு அதிரடி விருந்தை கொடுக்க அகிலா அபுல் கலாம் முடிவு செய்துள்ளார்.
அதற்காக பிரியாணி, பிரைட் ரைஸ், பரோட்டா, சூப் என மொத்தம் 101 உணவு வகைகளை தனது கைப்பட தயாரித்து விருந்து பரிமாறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் இதே போன்று ஆந்திராவில் மாமியார் ஒருவர் தனது மருமகனுக்காக 67 உணவு வகைகளை தனது கைப்பட தயாரித்து விருந்து பரிமாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)