VIDEO: 'மருமகன்' வீட்டுக்கு வராருன்னு... தடல் புடலா 'விருந்து' ரெடி பண்ண 'மாமியார்'... விதவிதமா மொத்தம் '67' வகை சாப்பாடாம்!’ - இந்த மாதிரி 'மாமியார்' எல்லாம் எங்கயா இருக்காங்க???
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய நாகரீகப்படி, திருமணத்தின் போது மணமக்களின் இரு வீட்டாரும் செய்யும் சடங்கு காரியங்களில் தனி அக்கறை செலுத்துவது வழக்கம்.
அதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு சடங்கு சம்ப்ரதாயங்களையும் மிகவும் கவனித்ததுண் செய்வார். இந்நிலையில், திருமணம் முடிந்த பின், தனது வீட்டிற்கு முதன் முதலாக வருகை தரும் மருமகனுக்காக குடிக்க கொடுக்கும் பானம் முதல் விருந்து முடிந்து சாப்பிடும் பீடா வரை மாமியாரே தனது கைப்பட சமைத்த சம்பவம் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்மணி, மணமகன் முதல் முறையாக வீட்டிற்கு வருகை புரிவதையொட்டி, அவருக்காக மொத்தம் 67 உணவு வகைகளை சமைத்து வைத்துள்ளார்.
அந்த உணவு வகைகள் மொத்தம் ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அருஞ்சுவை என்னும் ஆறு வகை சுவைகளில் உணவுகளை தயார் செய்து அது குறித்த விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது இணையத்தளங்களில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இப்படி ஒரு மாமியாரா என பலர் வியப்படைந்து வருகின்றனர்.
This lady has prepared a 67-item Andhra five-course lunch for her visiting son-in-law, consisting of a welcome drink, starters, chaat, main course and desserts! Wow! #banquet pic.twitter.com/Li9B4iNFvc
— Ananth Rupanagudi (@rananth) July 8, 2020