மீண்டு(ம்) வருமா பாஜக?.. 'பெருவாரியான' தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை.. கள நிலவரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 23, 2019 10:19 AM
17வது மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என இந்தியாவை நோக்கி உலகம் முழுவதும் கவனம் குவிந்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்கிற சூழலில், 542 தொகுதிகளில் நிகழ்ந்த தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் விறுவிறு நிலையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளிலும், பிரதமர் மோடி பாஜகவின் வேட்பாளராக வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். முதலில் ராகுல் காந்தி அமேதியில் முன்னிலையில் இருந்ததாகவும், பின்னர் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதேபோல் மத்தியில் ஆளும் பாஜகவைப் பொருத்தவரை சுமார் 295 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், காலை 10.30 மணி வரையிலான களநிலவரப்படி 295 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதாகவும், மொத்தம் 542 தொகுதிகளில் நிகழ்ந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகான முன்னிலை விபரங்கள் கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபரங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.