'ஆட்சி மாற்றம் இல்ல.. அமைப்பு மாறனும்'.. பணத்த திருப்பித் தருமா தேர்தல் ஆணையம்?’ சீமான் ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 18, 2019 06:00 PM
வாக்களிக்கும்போது இயந்திரத்தில் நிகழும் முறைகேடுகள் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பற்றத் தனத்தையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
பணப்பட்டுவாடாவினால் தேர்தலை ரத்து செய்வதால், என்னதான் விளைவு நிகழும்? தொடர்ந்து அதையேத்தான் செய்வார்கள். அவரவர் செலவு செய்த பணத்தை திருப்பி தருமா தேர்தல் ஆணையம்? இது என்ன விளையாட்டா? யார் பணப்பட்டுவாடா செய்தார்களோ அவர்களை மட்டுமே தகுதிநீக்கம் செய்யலாம். அது வேண்டுமானால் மாற்றத்தை கொண்டுவரலாம் என்றும் சீமான் கூறியுள்ளார்.
கபடி விளையாடும்போது அவுட் ஆனவர், அல்லது தெரியாத்தனமாக தவறு செய்பவரைதான் வெளியில் அனுப்ப வேண்டும். ஆனால் இளைஞர்களும் மாணவர்களும் மக்களும் நீங்கள் என்னதான் பணத்தைக் கொடுத்து மறைத்தாலும் அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தால் ஒரு மாற்றமும் நிகழாது. அமைப்பும் அடிப்படை அரசியலும் மாற்றம் பெற்றாலொழிய எதுவும் மாறாது என்று கூறியுள்ளார்.
உதாரணமாக, ஒரே நாடு என்கிறீர்கள், ஒரே மதம் என்கிறீர்கள், ஒரே சட்டம் என்கிறீர்கள் ஆனால் ஒரே நாளில் தேர்தலையே உங்களால் நடத்த முடியவில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கௌரி லங்கேஷ் இறப்பு உள்ளிட்ட எத்தனையோ கோர நிகழ்வுகளுக்கு இன்னும் மூத்த தலைவர்கள் பதில் சொல்லவில்லை. ஒருவரை நாங்கள் தோற்கடிப்போம், ஆனால் அவர் பாராளுமன்றத்தில் பதவி வகிப்பார். இதுதான் அமைப்பில் உள்ள கோளாறு என்றும் சீமான் பேசினார்.