'மோடி திரும்பவும் பிரதமராவாரா??’.. ரஜினி கூறிய பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 19, 2019 02:45 PM

ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள்.

Rajinikanth meets press people after loksabha elections 2019

அடுத்த முறை உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென விரும்புவதாக உங்கள் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்களே?

கண்டிப்பாக நான் என் ரசிகர்களை ஏமாற்றப் போவதில்லை.

மோடி மீண்டும் பிரதமராக வருவாரா?

அது மே-23ல் தெரியும்.

100 சதவீதம் வாக்குப்பதிவு நிகழவில்லையே? இதுகுறித்து நீங்கள் கூட வலியுறுத்தியிருந்தீர்கள்.?

70 % என்பது ஓகேதான். 4 நாட்கள் விடுமுறையாக அமைந்ததால், பலரும் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்திருக்கலாம், மற்றபடி இந்த வாக்குப்பதிவு கூடுமானளவு கவுரவமானதாகவே இருக்கிறது.

தேர்தல் சமயத்தில், அரியலூரில் வெவ்வேறு சமூக மக்களிடையே வன்முறைகள் நடந்திருக்கின்றன. இது ஜனநாயகத்தை காக்கும் முறையான தேர்தல்தான் நடந்திருக்கிறதா?

இல்ல, இதற்கு முன்பாக நடந்ததை விடவெல்லாம் இந்த வன்முறைகள் மிகக்குறைவுதான். ஆகையால் இம்முறை தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகளில் நிறையவே பணம் விளையாடியுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது குறித்து?

அதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் நான் எந்த கருத்தும் கூறவில்லை.

18 சட்டமன்ற இடைத் தேர்தல் தற்போது முடிந்துள்ளது, அதன் பிறகு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வீர்களா?

எப்போ வந்தாலும் தயார். ஓகே.