பார்வை மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் & 'முதல் முறையாக' வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 18, 2019 03:15 PM

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

mentally affected peoples and visually impaired people voting

நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் இன்று தேர்தல் நிகழும் நிலையில், 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் தேனாம்பேட்டை வாக்குச் சாவடியில் 39 வயதான திருநங்கை மேகலா வாக்களித்தார். 

மேலும், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மன நலம் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களித்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 159 மன  நலம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று அகில இந்திய ஜனநாயக நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ள நிகழ்வு நெகிழ வைத்துள்ளது.

இவர்களில் ஆண்கள் 103 பேரும் பெண்கள் 56 பேரும் அடங்குவர். இவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், பார்வை மாற்றுத் திறனாளிகள் சென்னை தண்டையார்பேட்டை வாக்குச்சாவடிக்குச் சென்று காவலர்களின் உதவியுடன் வாக்களித்தனர். நெல்லையிலும் 30  பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாக்கு இயந்திரத்தின் உதவியுடன் வாக்களித்தனர்.