'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 18, 2019 03:16 PM
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொது மக்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களின் வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுமணத் தம்பதியினர் சிலரும் மணக்கோலத்தில் வாக்களித்தனர். விருதுநகர் அருகே புதுமணத் தம்பதி, திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்தில் ஆர்வமுடன் வாக்களித்துள்னர்.
இரு தம்பதிகளும் திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.பலரும் புதுமண தம்பதியருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Jammu & Kashmir: A newly married couple arrive at a polling station in Udhampur to cast their votes for #LokSabhaElections2019 pic.twitter.com/RWTHAmAEwE
— ANI (@ANI) April 18, 2019
