'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 22, 2019 03:19 PM
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.தற்போது மூன்றாம் கட்ட தேர்தலானது நாளை (ஏப்ரல் 23) கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில்,இறுதி கட்ட தேர்தல் வேலைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பெண் கலெக்டர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல உதவும் வீடியோ,சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் வரப்பேற்பையும் பெற்றுள்ளது.கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்ட ஆட்சி தலைவராக பணியாற்றி வருபவர் அனுபமா.இவரது மேற்பார்வையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணிகளில், அதிகாரிகளும் காவல்துறையினரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது காவலர் ஒருவர் வாக்குப் பதிவு பெட்டியினை இறக்குவதற்கு மற்றொருவருக்காக காத்துக் கொண்டிருந்தார்.இதனை கவனித்த அனுபமா,சற்றும் யோசிக்காமல் ஒரு கை பிடிக்கப் பெட்டியை உள்ளே கொண்டு சென்றனர்.
ஆட்சியர் உதவுவதை கண்ட மற்ற அதிகாரிகள் உதவுவதற்காக ஓடி வர,அவர்களை வேண்டாம் என தனது சைகையால் தடுத்து விட்டார்.இதனை அங்கிருந்த ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்து விட,அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது போன்ற இளம் அதிகாரிகள் தான் ஜனநாயகம் இன்னும் இருப்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள் என,நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.