'அது எப்படி 'ரஜினி'க்கு மட்டும் அப்படி நடந்துச்சு'?...அறிக்கை கேட்கும் 'தலைமை தேர்தல் அதிகாரி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 19, 2019 05:18 PM

தமிழகத்தில் மக்களவை தேர்தலானது ஒரே கட்டமாக நேற்று நடைபெற்று முடிந்தது.சிறு சிறு வன்முறை சம்பவங்களை தவிர பெரிய அளவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.சென்னையில் நடந்த வாக்குப்பதிவில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை  ராணி மேரி கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Satyabrata Sahoo said question was raised with officers for Rajini

ரஜினி தனது வாக்கினை பதிவு செய்த பின்னர்,அவரது வலது கை விரலில் வாக்களித்தற்கான அடையாளமான மை வைக்கப்பட்டிருந்தது.அதுகுறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ‘இடது கைக்கு பதில் தவறுதலாக ரஜினியின் வலது கை விரலில் ஊழியர் மை வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும்.

மேலும் ரஜினி வாக்களித்த போது அதிகமான ரசிகர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தது தொடர்பாகவும் அறிக்கை கேட்கப்படும் என,தெரிவித்தார்.அதே போன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த நடைமுறைகளில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.