'தனியாக இருக்கும் பெண்களின் அறைக்குள் நுழைந்து 'இரவு முழுவதும் படுக்கை மெத்தைக்கு அடியில் பதுங்கி இருப்பதே வாடிக்கை!'.. சிசிடிவியால் சிக்கிய இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 06, 2020 01:22 PM

கேரளாவில் இளைஞர் ஒருவர் பெண்கள் தனியாக வசிக்கும் வீடுகள் உள்ள பகுதிகளுக்குள் சென்று பயமுறுத்தி வந்துள்ளதும், அவர்களின் படுக்கை மெத்தைக்கு அடியில் மறைந்திருந்துவிட்டு வந்துள்ளதுமான தொடர் சம்பவங்கள் தெரியவந்துள்ளன.

youth terrorised women and hides under their beds

கேரளாவின் கோழிக்கோடு அருகே,  குடியிருப்புப் பகுதிகளில் பெண்கள் தனியாக வசித்து வந்த வீடுகளை குறிவைத்து இரவில் யார், யாரோ வந்து கல் விட்டு எறிவதாகவும், இரவு நேரங்களில் வீட்டுக் கதவை தட்டுவதாகவும் வந்த தொடர் புகார்களை அடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போதுதான் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த 26 வயதான முகமது அஜ்மல் சிக்கினார். இரவு நேரங்களில் கோழிக்கோடு மற்றும் திரிசூரின் சில பகுதிகளில் பெண்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து கல்லெறிந்ததும், இரவில் சென்று கதவைத் தட்டியதும் மட்டுமல்லாமல் அவர் செய்த மேலும் சில அதிர்ச்சிக் காரியங்கள் தெரியவந்துள்ளன.

ஆம், இரவு நேரங்களில் பெண்களின் அறைக்குச் சென்று அவர்களின் படுக்கை மெத்தைக்கு அடியில் பதுங்கிக்கொண்டிருந்துமுள்ளார். இதை எதேச்சையாக இரவு எழுந்தபோது பெண் ஒருவர் கவனித்துள்ளார். உடனே கத்திக் கூச்சலிட்டு அக்கம் பக்கதினரை அழைத்துள்ளார். இவ்வாறான பாலியல் ரீதியான குற்றங்களை அந்த இளைஞர் செய்துவந்ததும் தெரியவந்ததை அடுத்து பாலியல் குற்றவழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முகமது அஜ்மல் கைது செய்யப்பட்டுள்ளார்.