'ஒத்திவைக்கப்பட்ட 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான’... ‘பொதுத் தேர்வு தேதியை அறிவித்த மாநிலம்’... ‘கொரோனா பாதிப்பு குறைவால் அதிரடி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதி குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு மாநிலங்களிலும் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதில் பல்வேறு மாநிலங்கள் தமிழகம் உள்பட 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்தன. ஆனால் பொதுத் தேர்வுகளான எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் பாதி நடந்த நிலையில், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஞ்சியுள்ள பத்தாம் வகுப்பு பாடங்களுக்கான தேர்வுகள், 11-ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள், மே 21-ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகளுக்கான பேப்பர்களை திருத்தும் பணி வரும் 13-ம் தேதி முதல் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஜூன் 1-ம் தேதி முதல் தொலைக்காட்சி மூலம் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும், செல்ஃபோன் இணையதளம் மூலம் அதற்கான கூடுதல் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா பாதிக்கப்பட்ட கேரளாவில், கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு ஒன்று இரண்டு பேரே பாதிக்கப்படுவதால், இந்த நடவடிக்கை அதிரடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மே 13-ம் தேதி முதல் கள்ளுக்கடைகளை திறக்கவும் அந்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படாது என கூறியுள்ளது.