"இன்ஸ்டாகிராம் காதலி ஹெல்ப் கேட்டா!".. "அதுக்கு இப்படியா செய்வீங்க?".. லாக்டவுனில் போலீஸாரை உறையவைத்த 3 புள்ளிங்கோக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள பகுதியில் லாக்டவுன் விதிகளை மீறுபவர்களை போலீசார் கண்காணித்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் அவ்வழியாக திருவனந்தபுரத்திலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்துள்ளது.
ஆனால் அந்த ஆம்புலன்ஸில் 3 இளைஞர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவர்கள் மூவரும் திருவனந்தபுரத்திலிருந்து நோயாளிகளை ஏற்றிச் செல்ல வந்ததாக குறிப்பிட்டதாகவும், அந்த ஆம்புலன்ஸ் செஞ்சிலுவை சங்க ஆம்புலன்ஸ் என்றும் அவர்கள் கூறியதாகவும், அதற்கு தகுந்தாற்போல் அந்த இளைஞர்கள் 3 பேரும் செஞ்சிலுவை சங்க உடையை அணிந்திருந்ததாகவு, அதனால் அவர்களை முதலில் நம்பியதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் பேச சந்தேகித்த, போலீசார் தங்களது பாணியில் இளைஞர்களை விசாரித்த போதுதான் அந்த இளைஞர்கள் பற்றிய உண்மை நிலவரம் தெரிய வந்தது. அதன்படி அந்த இளைஞர்களின் பெயர் சிவாஜித், சபீஸ் மற்றும் அல்போன்ஸ் என்பதும் அவர்கள் மூவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
ஆனால் ஆம்புலன்ஸில் எதற்காக இப்படி சுற்றி திரிந்தார்கள் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆம் அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஓர் இளம் பெண்ணுடன் பழகியதாகவும், அந்தப் பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி கூறியதகவும், அந்த பெண்ணை சந்தித்து அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு, அதே சமயம் லாக்டவுனில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு இந்த இளைஞர்கள் வந்தது தெரியவந்தது.
திரைப்பட பாணியில் இப்படி ஒரு அசாதாரண சம்பவத்தை செய்த இந்த இளைஞர்கள், இது போன்ற சூழ்நிலையில் இப்படியான முறைகளை பயன்படுத்த முயல்வது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அதுவும் ஆம்புலன்ஸை வைத்து நாடகம் ஆடுவது வேதனை அளிப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த இளைஞர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கிய போலீசார் அவர்களை வேறு வாகனங்களில் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.