14 வயசு தான்... 22 பவுண்டரிகளுடன் 'டபுள்' செஞ்சுரி... யாரோட பையன்னு தெரியுதா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 20, 2019 09:36 PM
கர்நாடகாவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என புகழப்படும் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் Vice-President’s XI அணிக்காக விளையாடி வருகிறார்.

Dharwad Zone அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 256 பந்துகளை சந்தித்த சமித் 22 பவுண்டரிகளுடன் தன்னுடைய முதல் டபுள் செஞ்சுரியை அடித்திருக்கிறார்.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்திய சமித் 94 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். அப்பாவை போலவே வலதுகை பேட்ஸ்மேனான சமித் தன்னுடைய இந்த சாதனைகளால் தற்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
Tags : #CRICKET #KARNATAKA
