70 வருசமா ஒருநாள் கூட 'பபியா' கோயிலுக்கு உள்ள வந்தது இல்ல...! - அனந்த பத்மநாபசுவாமியை தரிசித்து சென்ற முதலை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கோவிலில் வசிக்கும் முதலை ஒன்று 70 ஆண்டுகள் கழித்து கோவிலுக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபுரா என்னும் கிராமத்தில் அனந்த பத்மநாபசுவாமி கோவில் அமைத்துள்ளது. மேலும் அனந்த பத்மநாபசுவாமி கோவிலுக்கு சொந்தமான கோவிலில் சுமார் 70 ஆண்டுகளாக முதலை ஒன்று வசித்து வருவதாகவும், அதற்கு பபியா என்ற பெயரையும் சூட்டியதாகவும் பக்தர்களும், கோவில் நிர்வாகமும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் 70 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பபியா முதலை முதன்முறையாக கோவில் வளாகத்துக்குள் நுழைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் குளத்துக்கு திரும்பியதாக அனந்த பத்மநாபசுவாமி கோவில் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார்.
இந்த முதலையானது மிகவும் சாதுவானது எனவும், இதற்கு தினமும் இரு வேளை அவல், வெல்லம், வாழைப்பழங்கள் கலந்து முதலைக்கு உணவு வழங்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்படுகிறது. பக்தர்களும் தங்கள் பங்கிற்கு தினமும் உணவளித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த பபியா முதலை கோவில் நெய்வேத்தியத்தை தவிர மீன்களைக் கூட உண்ணுவதில்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.