முதல் தடவையா ஒரு டாக்டர் கையெழுத்து புரியுது.. வைரலாகும் மருந்து சீட்டின் புகைப்படம்.. டாக்டர் சொல்லிய சூப்பர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எழுதிய மருந்து சீட்டின் புகைப்படம் திடீரென வைரலாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் அந்த மருத்துவர் எழுதியிருக்கும் விதம் தான்.
மருத்துவரின் கையெழுத்து
பொதுவாக இந்த உலகில் கண்டுபிடிக்க மிகவும் சிரமமான காரியங்களுள் ஒன்று மருத்துவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதுதான். இது மெடிக்கல் பணியாளர்களுக்கு மட்டுமே தெரியும் வினோத பாஷையோ என்றுகூட சிலருக்கு தோன்றியிருக்கும். ஆனால், தற்போது வைரலாக பரவிவரும் இந்த புகைப்படத்தில் டாக்டர் ஒருவர் தெளிவான கையெழுத்தில் மருந்துகளின் பெயர்களை எழுதியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த பென்சி என்பவர் கடந்த வாரம் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த மருந்து சீட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் அல்லாமல், முதல்முறையாக ஒரு டாக்டரின் கையெழுத்து புரிவதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வந்தனர். உண்மையாகவே, டாக்டர் நிதின் நாராயணன் எழுதியுள்ள இதனை யாராலும் படிக்க முடியும். இவர் பாலக்காட்டில் உள்ள சுகாதார மையத்தில் (CHC) குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிவதாக பென்சி தனது பதிவில் குறிப்பிட்டிருந்திருக்கிறார்.
படிப்பு
சுலபமாக படிக்கும் வகையில் டாக்டர் நிதின் நாராயணன் மருந்து குறிப்புகளை block letters-களில் எழுதியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக பாலக்காட்டில் உள்ள சுகாதார மையத்தில் நிதின் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே தெளிவாக எழுதவேண்டும் என்பதே இவருடைய நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. டாக்டர் நாராயணன் திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்.டி. படிப்பையும் முடித்திருக்கிறார்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள டாக்டர் நிதின்,"நான் எனது மருந்துச் சீட்டுகளைத் block letters-களில் எழுதுகிறேன். மற்ற டாக்டர்கள் பிஸியாக இருப்பதால் அப்படி எழுதுகிறார்கள். நான் பிஸியாக இருக்கும்போது கூட மருந்துச் சீட்டுகளை தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன். நோயாளிகள் இதை அடிக்கடி பாராட்டுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், நிதின் எழுதிய மருந்து சீட்டின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.