புருஷன் வெளிநாட்டுல இருக்காரு.. தொழிலதிபரை வீட்டுக்கு வரவழைத்த இளம்பெண்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலமாக இளம்பெண் ஒருவருடன் பழகிவந்த தொழிலதிபர் காவல்துறையில் அளித்த புகார் பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டுவந்திருக்கிறது.
Also Read | குறையை கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசு.. கூகுள் வெளியிட்ட வெயிட்டான அறிவிப்பு..!
வலை
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக இளம்பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. நாள்கணக்கில் இருவரும் சாட் செய்து வந்திருக்கின்றனர். அப்போது தன்னுடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், தற்போது தாயுடன் வசித்து வருவதாகவும் அந்த பெண் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் எம்பிஏ முடித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் அந்த பெண். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தொழிலதிபரை வீட்டுக்கு வரும்படி இளம்பெண் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதனையடுத்து இரவு நேரத்தில் இளம்பெண்ணின் வீட்டிற்கு தொழிலதிபர் சென்றிருக்கிறார். தனி அறைக்கு அவரை அந்த பெண் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது திடீரென 5 பேர்கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறது. தொழிலதிபரை தாக்கிய அந்த கும்பல் அவரை ஆபாசமான முறையில் புகைப்படங்களும் எடுத்திருக்கிறது. மேலும், அவரது கழுத்தில் கிடந்த நான்கு சவரன் செயின், செல்போன், ஏடிஎம் கார்டு, கார், பத்தாயிரம் பணம் ஆகியவற்றை அந்த கும்பல் கைப்பற்றியிருக்கிறது.
credit : Mathrubhumi
புகார்
இதன் பின்னர் கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் அவரை மிரட்டி உள்ளனர். கொடுங்கல்லூரில் உள்ள தன்னுடைய பிளாட்டுக்கு சென்றால் பணம் எடுத்து தருவதாக அவர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த கும்பலும் அவரை அழைத்துச் சென்றிருக்கிறது. அப்போது அவர்களிடமிருந்து தப்பிய தொழிலதிபர் நேரடியாக பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கண்ணூரை சேர்ந்த கோகுல் தீப் இவரது மனைவி தேவ், கோட்டயம் பகுதியை சார்ந்த சரத் ,திருச்சூரை சார்ந்த அஜித், வினய் மற்றும் ஜிஷ்ணு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான இந்திரஜித் மற்றும் ரோஷித் ஆகிய இருவரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதில் சரத் என்பவர் பெண்ணைப்போல தொழிலதிபருடன் சாட் செய்து வந்ததும், தனது திட்டத்திற்கு தம்பதியை ஈடுபடுத்தியதும் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.