ராகுலை பாத்ததும்.. திடீர்ன்னு சிறுமி செஞ்ச விஷயம்.. கூட்டத்துக்கு மத்தியில் நடந்த சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒற்றுமை யாத்திரை பயணமாக, காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் உறுப்பினரும் எம்.பியுமான ராகுல் காந்தி, நாடு முழுவதும் 3500 கி.மீ ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7 ஆம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 10 ஆம் தேதி கேரள மாநிலம் சென்ற ராகுல் காந்தி, தொடர்ந்து அம்மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வந்தார்.
மேலும் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து கேரளாவில் யாத்திரை மேற்கொண்டு வந்த ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த ஒற்றுமை யாத்திரை பயணத்தில் அவ்வப்போது ஏராளமான சுவாரஸ்ய விஷயங்கள் அரங்கேறி இருந்தது. அதே போல, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் அமோக வரவேற்பை அளித்திருந்தனர். மேலும், இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கூட பெரிய அளவில் நெட்டிசன்கள் கவனத்தை பெற்றிருந்தது.
ராகுலுடன் ஏராளமான இளைஞர்கள் கூட இந்த ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியுடன் நடைப் பயணத்தில் பங்கேற்ற சிறுமி ஒருவர், உற்சாக மிகுதியின் காரணமாக ஆனந்த கண்ணீர் வடித்ததும், அதன் பின்னர் ராகுல் காந்தி செய்த விஷயமும் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
வயநாட்டில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்ட போது மற்ற இடங்கள் போல அங்கேயும் சிறப்பான மக்கள் வரவேற்பு அவருக்கு கிடைத்திருந்தது. அப்போது கூட்டத்தில், ராகுலை பார்க்க சிறுமி ஒருவர் வேகமாக ஓடி வந்துள்ளார். அப்போது உற்சாக மிகுதியில் இருந்த அந்த சிறுமி, ராகுலை பார்த்ததும் அவரது கையை பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். தொடர்ந்து, அவர் ஆனந்த கண்ணீர் வடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.
இதனை பார்த்த ராகுல் காந்தி, சிறுமி தோள் மீது கைபோட்டு அவரை தேற்றி ஆறுதல் கூறவும் செய்தார். இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. விரைவில் கேரள மாநிலத்தில் பயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி, அடுத்து வேறு மாநிலம் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
