டீ விற்கும் வாலிபரை கரம்பிடித்த மருத்துவர்.. "அவரு மேல் LOVE வந்த காரணம் தான் அல்டிமேட்!!"..
முகப்பு > செய்திகள் > உலகம்உண்மையான காதல் மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் எதை வேண்டும் வென்று விடலாம் என பலரும் கூறுவார்கள்.

அந்த அளவுக்கு உண்மையான காதல் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் இந்த உண்மையான காதலுக்கு பணம், மதம், நாடு, மொழி, ஏழை, பணக்காரன் என்று எந்த ஒரு பாகுபாடும் தெரியாது.
அப்படிப்பட்ட காதல் மிகவும் மகத்தான ஒன்றாகவே பார்க்கப்படும் நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜோடி தொடர்பான செய்தி வந்து தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கிஷ்வர் ஷஹிபா என்ற பெண் ஒருவர் மருத்துவராக இருந்து வருகிறார். இவர் வேலை பார்த்து வந்த அதே மருத்துவமனையில் ஷாஷாத் என்பவர் மருத்துவர் அறைகளை சுத்தம் செய்வதும், மருத்துவர்களுக்கு டீ விற்பனை செய்யும் வேலையிலிம் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படி மருத்துவமனையில் பணியாளராகவும், டீ விற்பனை செய்யும் நபராகவும் இருந்த ஷாஷாத் மீது தான் கிஷ்வர் ஷஹிபாவுக்கு காதல் வந்துள்ளது. முன்னதாக, ஷாஷாதை முதலில் பார்த்த போது, மருத்துவமனை பணியாளராகவோ அல்லது டீ விற்பனை செய்யும் நபராகவோ ஷஹிபாவுக்கு தோன்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த தொழிலை ஷாஷாத் நடத்தி வந்ததாலும், எளிமையாக இருந்ததாலும் அவர் பால் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளார் ஷஹிபா.
மேலும் அந்த மருத்துவமனையில், 3 மருத்துவர்களின் அறையை சுத்தம் செய்வதுடன் அவர்களுக்கு தேநீர் கொடுக்கும் வேலையை ஷாஷாத் பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் மீது ஏற்கனவே ஈர்க்கப்பட்ட கிஷ்வர் ஷஹிபா, போன் நம்பரையும் கேட்டு வாங்கி உள்ளார். இதன் பின்னர் இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர். அப்போது ஒரு நாள், தன்னுடைய மருத்துவர் அறையில் வைத்து தனது காதலையும் ஷாஷாத்திடம் ஷஹிபா வெளிப்படுத்தி உள்ளார்.
ஒரு பெண் மருத்துவர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதால் அதனை கொஞ்சம் கூட நம்ப முடியாத ஷாஷாத், அதிர்ந்து போனது மட்டுமில்லாமல், காய்ச்சல் வரும் அளவுக்கு வரை சென்றுள்ளது. ஷஹிபா காதலுக்கு பின்னர் ஷாஷாத்தும் சம்மதம் சொன்ன நிலையில் இருவரும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்துள்ளனர்.
மேலும், தன்னுடைய சக மருத்துவர்கள் தன்னை கிண்டல் செய்வதால் வேலையில் இருந்து ஒதுங்கிய ஷஹிபா, புதிதாக க்ளினிக் ஒன்றை தொடங்கவும் திட்டம் போட்டுள்ளார். ஷஹிபா மற்றும் ஷாஷாத் ஆகியோர், பாகிஸ்தானின் திபால்புர் பகுதியில் ஒன்றாக இணைந்து வசித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் பலரும் இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
