"தோளுல 300 கிலோ வெயிட்டு".. ரியல் பாகுபலியாக மாறிய கேரள வாலிபர்.. அனல் பறக்கும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில் யாரும் எதிர்பாராத வகையிலான அசத்தலான அல்லது மிகவும் ரிஸ்க் நிறைந்தது தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகள் இணையத்தில் வேற லெவலில் ரவுண்டு அடிக்கும்.
அப்படிப்பட்ட வீடியோக்களை நாம் பார்க்கும் போது, ஒரு நிமிடம் சற்று பயம் கூட நம் மனதில் தோன்றலாம். அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கேரள மாநிலம், இடுக்கி பகுதியில் ஓண தின ஸ்பெஷலாக ஒரு போட்டி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதன் படி, பிரதீஷ் என்ற வாலிபர் ஒருவர் சுமார் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை தோளில் தூக்கி உள்ளார். தூக்கியதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத பிரதீஷ், சுமார் 73 மீட்டர் தூரம் வரை நடந்து செல்லவும் செய்துள்ளார். ஒரு போட்டி போல இது நடத்தப்பட்ட நிலையில், சாலையை சூழ்ந்திருந்த பொது மக்கள் அனைவரும், வாலிபருடன் சேர்ந்து ஆர்ப்பரித்து அவருக்கு உற்சாகத்துடன் ஊக்கமளிக்கவும் செய்தனர்.
சாலை முழுக்க நிரம்பி இருந்த மக்கள் வெள்ளத்தில், ஆரவாரத்திற்கு மத்தியில் உடல் பலத்துடன் மன வலிமையையும் ஒரு சேர, 300 கிலோ எடையுள்ள மரக் கட்டையை தூக்கி கொண்டு 73 மீட்டர் நடக்கவும் செய்துள்ளார் பிரதீஷ். அதன் பின்னர், அவர் மரக்கட்டையை சாலையில் போட்டதும் ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் வேற லெவலில் கரகோஷித்து பாராட்டவும் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பாகுபலி படத்தில் மிகப் பெரிய சிலையை பிரபாஸ் தூக்கிக் கொண்டு போவது போல காட்சி இருக்கும். சினிமாவில் மட்டும் தான் இப்படி எல்லாம் சாத்தியம் என மக்கள் கருதும் நிலையில், நிஜத்திலும் முடியும் என கேரள வாலிபர் செய்து காட்டி உள்ளார்.
மேலும், "கேரளாவின் பாகுபலி" என்றும் அந்த வாலிபரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், இது போன்ற முயற்சிகள் தீவிர பயிற்சிக்கு பின் எடுத்துக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம் என்றும், மற்றவர்களும் இது போல முயற்சி செய்ய வேண்டாம் என்றும் சில நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.