டிராஃபிக்கில் சிக்கிய DOCTOR.. ஆபரேஷன் தியேட்டரில் PATIENT.. மின்னல் முரளியாய் 3KM தூரத்த கடந்த தரமான சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, பெங்களூர் நகர பகுதிகளின் சாலைகள் எப்போதும் நெரிசல் மிகுந்த ஒன்றாக தான் காணப்படும்.

எதிர்பார்க்கும் நேரத்தில் சில இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், நாம் அதற்கு முன்னேற்பாடாக தயாராகி கொள்ள வேண்டும்.
அந்த வகையில், மருத்துவர் ஒருவர் நெரிசலில் சிக்கிக் கொண்ட நிலையில், அதன் பின்னர் அவர் செய்த விஷயம் தொடர்பான செய்தி, தற்போது பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
பெங்களூரு பகுதியில் பிரபல இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வருபவர் கோவிந்த் நந்தகுமார். இவர் பெங்களூரில் உள்ள சர்ஜாபூர் மணிபால் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அவசர லேப்ரோஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்வதற்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மருத்துவமனைக்கு அருகில் சில கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென போக்குவரத்து நெரிசல் உருவானதால் அதில் திடீரென கோவிந்த் சிக்கி உள்ளார்.
ஆரம்பத்தில் சற்று நேரம் காத்திருந்து பார்த்த கோவிந்த், மெல்ல நகர்ந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், பல நிமிடங்கள் கடந்தும் ஒரு அடி கூட கார் நகர முடியாமல் கடும் அவதிப்பட்டுள்ளார். மேலும் மேப்பில் பார்த்த போது போக்குவரத்து நெரிசல் தாண்டி மருத்துவமனை சென்றடைய 45 நிமிடங்கள் வரை ஆகும் என்றும் அதில் காட்டியுள்ளது. நேரத்திற்கு சென்றடைய வேண்டும் என்பதில் தீவிரமாக முடிவு செய்த கோவிந்த் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்த கோவிந்த், உடனடியாக காரை அங்கு ஒதுக்கி நிறுத்திவிட்டு, சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை இருந்த மருத்துவமனைக்கு ஓடிச் சென்றுள்ளார். நேரத்திற்கு மருத்துவமனை சென்றடைந்த கோவிந்த், நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் செய்து முடித்துள்ளார்.
இது தொடர்பாக பேசும் கோவிந்த், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் எனக்கு ஓடுவது மிகவும் எளிதாக இருக்கிறது என்றும், நான் மருத்துவமனைக்கு மூன்று கிலோமீட்டர் ஓடி அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தேன் என்றும் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட போதிலும் நோயாளியின் உயிர்தான் முக்கியம் எனக்கு கருதி, சுமார் 3 கிலோமீட்டர் வரை ஓடியே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
