ஆன்லைனில் போன் ஆர்டர் செய்த பெண்.. "ஆனா, வந்த பார்சல்ல இருந்தது 3 பவுடர் டப்பா".. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், கடைக்கு சென்று ஒரு பொருட்களை நாம் வாங்குவதை விட, ஆன்லைன் மூலம் நேரம் எடுத்து மிகவும் பொறுமையாக ஒரு பொருளை பற்றி தெரிந்து கொண்டு, பின்னர் அதனை ஆன்லைனிலேயே பலரும் ஆர்டர் செய்கிறார்கள்.

Also Read | "இது தான் மனித குலத்துக்கே ஆபத்தா இருக்கப் போகுது".. பரபரப்பு எச்சரிக்கை கொடுத்த எலான் மஸ்க்!!
கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், மக்கள் வீட்டிலேயே முடங்கிப் போனதால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கம் என்பது மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிகரித்தது.
அப்படி நாம் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, அதில் ஏதேனும் அசம்பாவிதமாக நேரும் சம்பவங்கள் தொடர்பாக நிறைய கேட்டிருப்போம்.
அப்படி, கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் பொருள் ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், தனக்கு வந்த பார்சலுக்குள் இருந்த பொருளை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப் போனது மட்டுமில்லாமல், அதன் பின்னால் உள்ள காரணமும் கடும் அதிர்ச்சியை அவருக்கு ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி அருகே அமைந்துள்ள நெடுங்கண்டம் என்னும் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணன். இவர் தனது கணவருக்காக கடந்த மாதம், 16,999 ரூபாய் விலை மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை ஆர்டர் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், அஞ்சனா ஆர்டர் செய்த மொபைல் போன் பார்சல், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெலிவரி செய்ததற்கான கட்டணம் உட்பட மொத்தம் 17,028 ரூபாயையயும் டெலிவரி ஊழியர் கையில் அஞ்சனா கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கணவருக்காக ஆசை ஆசையாக வாங்கிய மொபைல் போன் பார்சலை பிரித்து பார்த்துள்ளார் அஞ்சனா கிருஷ்ணன். ஆனால், அவருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று உள்ளே காத்திருந்தது.
இதற்கு காரணம், மொபைல் போன் இருக்க வேண்டிய இடத்தில், காலாவதியான 3 பவுடர் டப்பாக்கள் அந்த பார்சலுக்குள் இருந்துள்ளது. இதனால், அதிகம் மன உளைச்சல் அடைந்த அஞ்சனா, தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்திடம் இது பற்றி புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இதனையடுத்து, அவர்களும் அந்த பவுடர் டப்பா வந்த பார்சலை புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லி உள்ளனர்.
இது தவிர, நெடுங்கண்டம் போலீஸ் மற்றும் நுகர்வோர் நீதிமன்றத்திலும் புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதன் முதற்கட்ட விசாரணையில், அஞ்சனாவுக்கு பார்சல் கொடுத்த ஊழியர் தான் மொபைல் போனை மாற்றி விட்டு, பவுடர் டப்பாக்களை வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் உண்மை நிலவரம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Also Read | "சைஸ்'ல குட்டி தான், ஆனா"... பீச் போறவங்களுக்கு எச்சரிக்கை.. மண்ணுல பதுங்கி இருக்கும் கொடிய 'மீன்'

மற்ற செய்திகள்
