என் 10 பஸ்ஸையும் கிலோ 45 ரூபாய்க்கு தர்றேன்.. யாராவது வாங்குறீங்களா? ஏன் இப்படி ஒரு முடிவு? ஃபேஸ்புக்கில் உருக்கம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: கொரோனா தொற்றினால் அரசு பல கட்டுப்பாடுகள் போட்டது. இதன் காரணமாக பெரிய இழப்பை சந்தித்த பஸ் முதலாளி 10 பஸ்களை கிலோ ரூ.45-க்கு பழைய இரும்பு விலைக்கு விற்கப்போவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த உலகத்தையே கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. இதனால் உலகத்தை விட்டு மாண்டவர்கள் ஏராளம். அதைவிட வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். அனைத்து மட்டங்களிலும் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உண்டு.
மிக குறைவான விலைக்கு விற்பனை:
அதேப் போன்று கேரளாவில் கொரோனா வைரசினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அதிக மக்கள்பாதிக்கப்பட்டனர். அதில் கொச்சியை தலைமையிடமாக கொண்டு ராய் டூரிசம் என்ற பெயரில் தனியார் பஸ் போக்குவரத்து கழகம் நடந்து வந்தது. இதன் உரிமையாளர் ராய்சன் ஜோசப் ஆவார். இவருக்கு மொத்தம் 20 சுற்றுலா பஸ்கள் இருந்தது. கோவிட் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட ராய்சன் ஜோசப் தனது 10 பஸ்களை மிக குறைவான விலைக்கு விற்றார். ஆனாலும் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த அவரால் இயலவில்லை.
பழைய இரும்பு விலைக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளேன்:
இந்நிலையில், மீதமுள்ள 10 பஸ்களையும் விற்பனை செய்ய முடிவு செய்த ராய்சன் ஜோசப் இது குறித்து பலரிடம் பேசி வந்துள்ளார். ஆனால் எவருமே பஸ்சை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் ‘தன்னிடம் இருக்கும் 10 பஸ்களை கிலோ ரூ.45-க்கு அதாவது பழைய இரும்பு விலைக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளேன்’ என பதிவிட்ட்ருந்தார். இந்த அறிவிப்பு கேரளாவில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.
3 பஸ்களுக்கு மட்டுமே புக்கிங்:
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 20 பஸ்களில் 10 பஸ்களை விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். கடந்த வாரத்தில் 4 நாட்கள் மூணாறுக்கு செல்ல 3 பஸ்களுக்கு மட்டுமே புக்கிங் ஆனது. வழக்கமாக மூணாறு வழித்தடத்தில் பிப்ரவரி மாதத்தில் போக்குவரத்து நெரிசல் கூட்டமாக இருக்கும். ஆனால் இப்போது இந்த தடவை மிகவும் வெறிச்சோடி உள்ளது.
இந்த நிலை பலருக்கும் உள்ளது:
கடனை அடைக்க 10 பஸ்களை முன்னரே விற்று விட்டேன். இப்போதும் பொருளாதார நிலை தாக்குபிடிக்கும் படியாக இல்லை. ஆகவே, மீதமுள்ள பஸ்களை கிலோ ரூ.45-க்கு பழைய இரும்பு விலைக்கு விற்க தயாராக உள்ளேன். என்னை அழித்துக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த நிலை பலருக்கும் உள்ளது.' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
