"என் குழந்தைய காப்பாத்துங்க சார்..கதறிய தாய்".. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து ஷாக்கான டாக்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுழந்தை வளர்ப்பு மிகவும் கவனமுடனும் அதீத அக்கறையுடனும் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய பொறுப்பாகும். வீட்டில் உள்ள குழந்தைகளை எப்போதும் கண்காணித்து வருவதே அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நாம் செய்யக்கூடிய முதல் பணி. அதுவும் பச்சிளம் குழந்தைகளை கண்காணிப்பதில் இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படும். இந்த விஷயத்தில் பெற்றோர் காட்டும் சிறிய அலட்சியம் கூட மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதன்படி, கேராளாவில் 8 மாத குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கவலைகொண்ட பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அப்போது டாக்டர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது அனைவரும் ஷாக்கான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த மண்ணுத்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் - தீபா தம்பதிகள். இவர்களுக்கு 8 மாதத்திற்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக இந்தக் குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அதன் பெற்றோர் கவலையில் இருந்தனர். உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் வினோத் - தீபா அச்சமடைந்து இருக்கிறார்கள்.
இதனையடுத்து திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்திருக்கிறார்கள் பெற்றோர்கள். ஆரம்ப கட்ட சிகிச்சைகள் பலனிக்காததால் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஸ்கேன்
குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடையவில்லை என்பதால் வேறு ஏதும் பிரச்சினை குழந்தையிடம் இருக்கிறதா? என்பதை கண்டறிய மருத்துவர்கள் முயற்சி எடுத்திருக்கிறார்கள் . அப்படி ஸ்கேன் எடுக்கும் போது , குழந்தையின் சுவாச குழாயில் ஊக்கு ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அறுவை சிகிச்சை
இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மூலமாக ஊக்கை அகற்றும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக, குழந்தையின் சுவாசக் குழாயில் இருந்து ஊக்கு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் பலனாக குழந்தையின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குழந்தை பூரண குணமடைந்ததால் இன்று குழந்தையினை டிஸ்சார்ஜ் செய்ய அனுமதித்தனர்.
இரண்டு வாரங்களாக சுவாசக் குழாயில் ஊக்கு சிக்கியதால் பாதிப்படைந்த தங்களது குழந்தை தற்போது பூரண நலமடைந்து இருப்பது மகிழ்ச்சியளிப்பதாவும் இன்று சந்தோஷத்துடன் வீடு திரும்ப இருப்பதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
