பிரபல ‘பாம்பு பிடி மன்னன்’ வாவா சுரேஷுக்கு நேர்ந்த சோகம்.. பதற வைத்த சம்பவம்.. பிரார்த்திக்கும் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல பாம்பு பிடி வாவா சுரேஷை நல்லபாம்பு கடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த செங்கனாச்சேரி அருகே குறிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்லபாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனை அடுத்து பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேசுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறித்து விரைந்து வந்த வாவா சுரேஷ், வீட்டுக்குள் பதுங்கி இருந்த நல்லபாம்பை பிடித்தார்.
இதனை அடுத்து அதை சாக்கு பையில் போட முயன்றபோது, வாவா சுரேஷின் வலது கால் தொடையில் நல்லபாம்பு கடித்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாம்பு கடித்த சிறிது நேரத்திலேயே வாவா சுரேஷ் மயங்கி விழுந்தார். இதனால் அவரை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாவா சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வா வா சுரேஷை விஷப்பாம்பு தீண்டுவது இது முதன்முறையல்ல. கடந்த 2020-ம் ஆண்டு கட்டுவிரியன் வகை பாம்பு ஒன்று தீண்டியதில், பல நாட்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர பெற்று உயிர் பிழைத்தார்.
இந்த சூழலில் தற்போது அவரை மீண்டும் பாம்பு தீண்டியுள்ளது. பொதுமக்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் பாம்பு பிடிக்க வா வா சுரேஷ் வந்துவிடுவார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் மக்கள் பலரும் வா வா சுரேஷ் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவலறிந்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், வா வா சுரேஷுக்கு இலவச உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
