திடீரென தீ பிடித்து எரிந்த லாரி.. பயத்தில் குதித்த டிரைவர்.. மறுநொடியே வந்த நபர் சூப்பர் ஹீரோவாக மாறி சாகசம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கோடு : லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில், ஹீரோவாக மாறிய ஒருவரின் சாமர்த்திய செயலால், மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால், பொது மக்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கோடஞ்சேரி என்னும் நகரம். இப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன், வைக்கோலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.
அந்த சமயத்தில், லாரியின் மீது மின் கம்பி ஒன்று, வைக்கோலுடன் உரசிக் கொள்ள, உடனடியாக வைக்கோல் மீது தீப்பிடிக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக, லாரியில் இருந்து முழு வைக்கோலிலும், தீ பரவியுள்ளது.
பயத்தில் குதித்த டிரைவர்
திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீ பிடித்துக் கொண்டதால், மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள், அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தன்னுடைய வண்டி, நிச்சயம் முழுவதும் தீ பிடித்து விடும் என்பதை உணர்ந்த டிரைவர், பயத்தில் அதிலிருந்து குதித்து விட்டார்.
ஹீரோவான ஷாஜி பாப்பன்
ஆனால், அங்கிருந்த ஷாஜி வர்கீஸ் என்ற ஒரு நபர், லாரி எரிந்து நடைபெறவிருந்த பெரிய விபத்தினை, மிகவும் திறமையுடனும், தைரியத்துடனும் தடுத்து நிறுத்த முடிவு செய்தார். லாரி டிரைவர் குதித்து விட்ட நிலையில், ஷாஜி வர்கீஸ் என்ற அந்த நபர், தீ பற்றிய லாரியில் ஏறி அதனை வேகமாக ஓட்டியுள்ளார். தொடர்ந்து, அந்த லாரியை ஒரு காலி மைதானத்திற்குள் கொண்டு சென்ற ஷாஜி, அதனை Zig Zag முறையிலும் ஓட்டிச் சென்றுள்ளார்.
பெரிய விபத்தே நடந்திருக்கும்
லாரி முழுவதும் தீ பரவி, சேதம் ஆகி விடக் கூடாது என்பதற்காக, ஷாஜி அப்படி செய்துள்ளார். ஒரு காலி மைதானத்தில் லாரியைக் கொண்டு சென்றதால், மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரு வேளை, சாலையில் ஆள் நடமாடும் இடத்திலேயே முழுவதும் தீ பிடித்து எரிந்திருந்தால், நிச்சயம் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.
ஆனால், அதற்கு முன்பாக, மிகவும் திறன்பட சிந்தித்து, வேறு வழியில் தைரியமாக விபத்தினை தவிர்த்த ஷாஜி வர்கீஸிற்கு பார்ட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

மற்ற செய்திகள்
