"இந்த ரெண்டு டீமும் 'FINALS' வந்த நல்லா 'இருக்கும்'ல..." அப்போவே கரெக்டா 'GUESS' பண்ண முன்னாள் 'வீரர்'... வைரலாகும் 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 09, 2020 03:02 PM

ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன.

aakash chopra old tweet predicting about ipl final gone viral

முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான், ஸ்டோயினிஸ், ஹெட்மையர் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர்.aakash chopra old tweet predicting about ipl final gone viral

பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி முடிவுக்கு பின்னர், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கடந்த மாதம் செய்த ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.aakash chopra old tweet predicting about ipl final gone viral

கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியன்று ஆகாஷ் சோப்ரா, 'மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதா?' என பதிவிட்டுள்ளார். அப்போது இந்த இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருந்த போது இப்படி ட்வீட் செய்துள்ளார். அதே போல, தற்போது அந்த இரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

 aakash chopra old tweet predicting about ipl final gone viral

 

இதனால் அந்த டீவீட்டை அவர் மீண்டும் தற்போது பகிர்ந்துள்ளார். ஆகாஷ் சோப்ரா மிக சரியாக அப்போதே கணித்துள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Aakash chopra old tweet predicting about ipl final gone viral | Sports News.