இந்த ஆட்டம் போதுமா?... சமூக வலைதளங்களில்.. 'தீயாய்' பரவும் வீடியோ.. நெட்டிசன்கள் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 10, 2019 05:57 PM

தனிநாடு கொள்கையை அறிவித்த நித்யானந்தா தற்போது நெட்டிசன்களின் வாய்க்கு அவலாக மாறியிருக்கிறார். நேற்று பேஸ்புக் நேரலையில் பேசிய நித்யானந்தா விரைவில் தனிநாடு குறித்து அறிவிக்கப் போவதாக தெரிவித்து இருந்தார்.

Nithyananda disciples dance video, Netizens reacts

நாட்டின் பெயரை கைலாசா என்பதில் இருந்து ஸ்ரீ கைலாசா என மாற்றி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அதிகபட்ச விசிட்டர்கள் காரணமாக சர்வர் முடங்கி போய் தற்போது வேறு சர்வர் மாற்றி இருப்பதாகவும் அவர் சலித்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நித்யானந்தா சிஷ்யைகள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த வருடம் இந்த வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது நித்யானந்தா குறித்த செய்திகள் அதிகம் தேடப்பட்டு வரும் சூழ்நிலையில், மீண்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.