'ஐயோ என் குழந்தைக்கு பசிக்கும்'...'பிரேக்கில் ஓடோடி வந்த வீராங்கனை'...நெகிழவைக்கும் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 12, 2019 10:47 AM

விளையாட்டு போட்டியின் இடைவேளையில் வீராங்கனை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் பலரையும் நெகிழ செய்துள்ளது. தாய்மைக்கு இதை தவிர வேறன்ன உதாரணம் வேண்டும் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Mizoram Volleyball Player Lalventluangi Breastfeeds Child Amid Game

மிசோரம் மாநிலம்  துய்கும் என்ற வாலிபால் அணியை சேர்ந்த வீராங்கனை லால்வென்ட்லுயாங்கி. இவர் மிசோரம் மாநில அளவிலான வாலிபால் தொடர் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். போட்டிக்கு சென்ற அவர் தன்னுடன் தனது ஏழு மாதக் குழந்தையையும் எடுத்து சென்றார். அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு உழைத்த லுயாங்கி, போட்டியின் பரபரப்பான நேரத்திலும் தனது தாய்மையை மறக்கவில்லை.

போட்டியின் இடைவேளையில் ஓடி வரும் லுயாங்கி, பசியோடு இருக்கும் தனது 7 மாத குழந்தைக்கு  தாய்ப்பால் புகட்டினார். குழந்தைக்கு பசியாற்ற வேறு வழிகள் இருந்தபோதிலும், அவர் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கவில்லை. இது பலரையும் நெகிழ செய்துள்ளது. பலரும்  லால்வென்ட்லுயாங்கியை பாராட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே மிசோரம் மாநில மந்திரி  ராபர்ட் ரோமாவியா தனது ட்விட்டர் பக்கத்தில் வீராங்கனை தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் படத்தை பகிர்ந்து, அந்த வீராங்கனைக்கு தனது சல்யூட் என்று கூறி உள்ளார். வீராங்கனை தாய்ப்பால் புகட்டும் போட்டோ வைரலாக பரவி வருகிறது.

Tags : #TWITTER #MIZORAM #VOLLEYBALL PLAYER #LALVENTLUANGI #TUIKUM VOLLEYBALL TEAM #SEVEN-MONTH-OLD BABY #MIZORAM STATE GAMES 2019 #NINGLUN HANGHAL