'நமக்கு குழந்தை இல்ல...' 'அவ மட்டும் குழந்தையோட ஜாலியா இருக்கா...' 'ஆளில்லாதாக நேரத்துல வீட்ல நுழைஞ்சு...' - வீட்டுக்கு போன போலீசாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் மனைவியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த பெண்குழந்தையை குடிநீர் தொட்டிக்குள் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதுடைய மகேஷ் என்னும் நபர் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் சமராஜநகர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். பல ஆண்டுகள் முன்பு இவருக்கும் கவுரம்மா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இருப்பினும் கவுரம்மா மற்றும் மகேஷ் அவர்களின் மணவாழ்க்கை கசப்புடன் சென்றதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் கவுரவம்மா, ஸ்வாமி மாலியநாயகர என்பவரை மணமுடித்து சந்தோசத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு மஹாலக்ஷ்மி என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
கவுரவம்மாவை பிரிந்த மகேஷும் ரத்னம்மா என்பவரை மணமுடித்துள்ளார். இருப்பினும் இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தைகள் பாக்கியம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதன்காரணமாக தன் முதல் மனைவியின் இனிய மணவாழ்க்கையை கெடுக்க முயன்ற மகேஷ் கவுரம்மாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
கவுரம்மா வீட்டில் இல்லாத சமயம் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து சிறுமி மகா லக்ஷ்மியை தன் இரண்டாவது மனைவி ரத்னம்மாவுடன் சேர்ந்து, தண்ணீர் தொட்டிக்குள் தள்ளிவிட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும் சிறுமி மஹாலக்ஷ்மியின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாலை வீடு திரும்பிய கவுரம்மா தன் குழந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தன் முதல் கணவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மகேஷ் வீட்டில் விசாரிக்க சென்ற காவல்துறையினர், மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மகா லக்ஷ்மியின் உடலை கைப்பற்றி, மகேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ரத்னம்மாவையும் கைது செய்துள்ளனர்.
மண வாழ்க்கையை விட்டு பிரிந்த பிறகும் மனைவி சந்தோசமாக இருப்பது பிடிக்காமல் முதல் கணவர் செய்த இந்த கொடூர கொலை சம்பவம் அக்கிராம மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
