'ஊருக்கே போய்டலாம்'... மூட்டை, முடிச்சுகளோடு கிளம்பிய மக்கள்... 'சென்னை'யை விட வெகுவேகமாக காலியாகும் 'மெட்ரோ' நகரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்.

கிராமப்புறங்களை விட நகரங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை சென்னை, மும்பை, டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய நகரங்களில் கொரோனா உச்சத்தில் உள்ளது. குறிப்பாக பெங்களூரில் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் வேகமாக பரவும் கொரோனா காரணமாக மக்கள் பெங்களூரை காலி செய்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் நகரம் வேகமாக காலியாகி ஆரம்பித்து இருக்கிறது. ரெயில்கள், விமானங்கள் மற்றும் பிற வாகனங்கள் வழியாக இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நகரத்தை காலி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக மக்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் நிரம்பி வழிய ஆரம்பித்து உள்ளன. அதிலும் நாளொன்றுக்கு சுமார் 65,000 ஆயிரம் வாகனங்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர். இதேபோல சென்னையில் கொரோனா அதிகரித்தபோது மக்கள் கூட்டம், கூட்டமாக சொந்த ஊர்களை நோக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
