அந்த 2700 கோடி என்ன ஆச்சு?... தற்கொலைக்கு பின்னும் 'அவிழாத' மர்மம்... பரபரப்பை கிளப்பிய அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகஃபே காபி டே உரிமையாளர் சித்தார்த்தா கடந்த ஆண்டு தீராத அழுத்தங்களால் தற்கொலை செய்து கொண்டார்.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியது. இதையடுத்து காபி டே இயக்குநர் குழு, முன்னாள் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி அசோக் குமார் மல்ஹோத்ராவை அழைத்து சித்தார்த்தா எழுதிய தற்கொலை கடிதத்தை விசாரிக்கச் சொன்னது. அதில் தான் இந்த 2700 கோடி விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது.
நிறுவன பணம் 2700 கோடியை அவர் முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தா தன்னுடைய குடும்பத்துக்கு சொந்தமான மைசூர் அமால்கடேட் காபி எஸ்டேட்ஸ் நிறுவனத்துக்குஅந்த பணத்தை செலவழித்து இருக்கிறார். இந்த தொகையை பங்குகள் வாங்கவும், கடன்களை திருப்பி செலுத்தவும், வட்டி கட்டவும் பயன்படுத்தி இருப்பதாக காபி டே நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் சித்தார்த்தா தன் கடிதத்தில், காபி டே கம்பெனியில் இருந்து MACEL (மைசூர் அமால்கடேட் காபி எஸ்டேட்ஸ்) கம்பெனிக்கு பணம் பரிமாற்றம் செய்த விஷயம், காபி டே எண்டர்பிரைசஸ் கம்பெனி நிர்வாகத்தினருக்கு முழுமையாகத் தெரியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறாராம். இதனால் இதுதொடர்பாக யாரையும் அழைத்து விசாரிக்க முடியாது என கூறப்படுகிறது. இதனால் காபி டே எப்போது இந்த கடன் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.