‘மனைவிய கடத்தி கேங் ரேப் செய்த கணவன்...’ ‘அதிர வைக்கும் கடத்தல் பின்னணி...’ - இப்படியொரு கொடூர கணவனா என அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாவட்டத்தில் கணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை கடந்த 26-ம் தேதி உத்தரப்பிரதேச மாவட்டம் ஜஹானாபாத் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஷாஹி ரயில் நிலையத்தின் தடத்தின் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தன் மகளின் கணவர் மீது புகாரளித்துள்ளார். இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு பல அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் தெரிய வந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 24, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, வரதட்சணை கேட்டு அடிக்கடி மனைவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு வருடங்கள் கடந்து, ஜனவரி 2018 இல், மனைவி கர்ப்பமாக இருந்தபோது குடும்ப சண்டையில் அவரை தாக்கியதில் கருக்கலைப்பு ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு புகார் அளித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 24 ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் குடும்ப ஆலோசனை மையத்தின் வளாகத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவியை நண்பர்கள் துணையுடன் கடத்தியுள்ளார். மேலும் ஆள் அரவம் இல்லாத இடத்திற்கு தன் மனைவியை அழைத்து சென்று தன் நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அதன்பின் ஜூலை 26 அன்று, ஜஹானாபாத் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஷாஹி ரயில் நிலையத்தின் தடங்களில் அந்தப் பெண் தூக்கி எறியப்பட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கபட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரையும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தரப்பினர் கூறியுள்ளனர்.
