VIDEO : "'கொரோனா' கன்ஃபார்ம்... வந்து 'ஆம்புலன்ஸ்'ல ஏறுங்க”... அடுத்த சில நிமிடங்களில் நடந்த 'ட்விஸ்ட்'... "இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே" என அரண்டுபோன 'அதிகாரிகள்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், தாவண்கரே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொனாலி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மா.

ஜக்கம்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்சில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்சில் ஏற மறுத்த ஜக்கம்மா, தனக்கு அருள் வந்திருப்பதாக கூறி திடீரென சாமி ஆட தொடங்கியுள்ளார். இதைக் கண்டு அதிகாரிகள் திகைத்து போயுள்ளனர்.
அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த சிலர், 'கொரோனா தொற்றுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு ஜக்கம்மா, 'விரைவில் கொரோனா தொற்று குணமடைந்து, நிலைமை எல்லாம் சரியாகி விடும். யாரும் பயப்பட வேண்டாம்' என ஜக்கம்மா பதிலளித்துள்ளார்.
முடியை விரித்துப் போட்டு கொண்டு சாமியாடிய மனைவியைக் கண்டு அவரது கணவர் கூட சற்று தயக்கத்துடன் அருகில் நின்றதாக தெரிகிறது. அவர் அருள்வாக்கு கூறி சாமியாடிக் கொண்டிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், ஜக்கம்மா அருள்வாக்கை நிறுத்தி சகஜ நிலைக்கு திரும்பிய பின் அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜக்கம்மாவின் செயலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
