'கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி...' 'அவரைத் தொடர்ந்து மகளுக்கும் கொரோனா...' மருத்துவமனையில் அனுமதி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி முன்னெச்சரிக்கையாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் தன்னைச் சந்தித்து சென்ற அனைவரையும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளவும் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, தற்போது அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எடியூரப்பா தனது குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
