VIDEO : "நீ என்ன ஆளு, நாங்க என்ன ஆளு"??... எங்க பைக்குல நீ 'கை'ய வைக்கலாமா??... 'பைக்'க தொட்டுட்டாருன்னு சொல்லி 13 பேரு சேந்து ஒருத்தர 'அடிச்சுருக்காங்க'... 'கர்நாடகா'வை உலுக்கிய 'அவலம்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் பகுதியில் இருந்து சுமார் 530 கி.மீ தொலைவில் விஜயபுரா எனும் மாவட்டம் அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த 28 வயது பட்டியலின இளைஞர் ஒருவர், மாற்று சாதியை சேர்ந்த நபரின் பைக்கை தொட்டதாக தெரிகிறது. இதனால், பைக்கை தொட்டதின் பெயரில் மாற்று சாதியினர் கும்பலாக இணைந்து அந்த இளைஞரை தாக்கியுள்ளனர். கம்புகள், காலணிகள் கொண்டு தாக்கிய நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இளைஞரின் பெற்றோர்கள் தனது மகன் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், அவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளனர். மேலும், அந்த இளைஞரின் சாதி பெயரை கூறியும், அவர்கள் திட்டியுள்ளனர். போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கும்பலை சேர்ந்த நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு போதும், கும்பலாக இத்தனை பேர் ஒன்றாக இணைந்து ஒரு இளைஞரை சாதி பெயரை கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#MobLynching A dalit man assaulted for allegedly touching a scooter belonging to an upper caste man. FIR registered in local police station in #karnataka #India
FIR and complaint copy in the thread, @KiranParashar21#DalitLivesMatterpic.twitter.com/pWVLhgTSc2
— The Dalit Voice (@ambedkariteIND) July 19, 2020