கமல்நாத் ராஜினாமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ... பத்திரிக்கையாளருக்கு உறுதியான கொரோனா தொற்று ...
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடைசியாக அம்மாநில சட்டசபை நிகழ்விலும், மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல் நாத்தின் ராஜினாமா செய்த பொது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.
மார்ச் 17 ஆம் தேதியன்று லண்டனிலிருந்து இந்தியா வந்த பத்திரிக்கையாளரின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பத்திரிக்கையாளரின் மனைவி, மகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சோதனையில் தெரிய வந்தது. பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் வேறு யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
