'எப்படி இங்க மட்டும் கொரோனாவின் பருப்பு வேகல'... 'ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்'... வெளிவந்த தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 25, 2020 05:39 PM

இவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று, என்பது தான் உலக  நாடுகள் பலவும் எழுப்பும் கேள்வி. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், ரஷியாவில் மட்டும் கட்டுக்குள் வந்தது தான் அந்த ஆச்சரியத்திற்கான காரணம்.

Why Is Russia’s Coronavirus Case Count So Low

உலக நாடுகளில் எல்லாம் கொரோனா குறித்த அச்சத்தினால் நடுங்கி கொண்டிருக்கும் வேளையில், பாதிப்புக்கு உள்ளானவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் நாடு என, இரண்டாவது இடத்தில் கெத்தாக இருக்கிறது ரஷ்யா. கடைசியாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில், 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. அதில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 கோடியே 67 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது எப்படி சாத்தியம் என்பது தான் பலரின் புருவங்கள் உயர காரணம்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில், அதன் பாதிப்பு  15 நாடுகளில் மட்டுமே முதலில் இருந்தது. அப்போதே உஷாரான ரஷ்யா பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், ஜனவரி 30-ந்தேதி சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். அதோடு தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ரஷ்யா உடனடியாக உருவாக்கியது. அதனோடு எல்லாவிதமான வெளிநிகழ்ச்சிகளுக்கு ஆரம்பத்திலேயே தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன.

சோவியத் ரஷியாவை உருவாக்கிய விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மாஸ்கோ செஞ்சதுக்கம்தான், அந்த நாட்டிலேயே சுற்றுலாப்பயணிகளை பெருவாரியாக வாரிக்கொள்கிற இடம். அங்கு மக்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவுவது அங்கு பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

ரஷ்யாவில் இன்னொரு கூடுதல் சிறப்பாக, அந்நாட்டு மக்கள் பல தலைமுறை பழமையானவர்கள். போர்கள், பஞ்சங்கள், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கின்றனர். அதுவும் அவர்களுக்கு பல வகைகளில் உதவியது. இதற்கிடையே மார்ச் 18-ந்தேதி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய அதிபர் புதின், “பொதுவாகவே நாங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அதற்காக நன்றி கடவுளே. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே ரஷ்யாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ரஷ்ய பிரதிநிதி டாக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், ''கொரோனா வைரசுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி மாதமே ரஷ்யாவில் தொடங்கி விட்டன. பல சோதனைகளை தாண்டி, ரஷ்யா பரந்த அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது'' என அவர் கூறியுள்ளார். இதற்கிடையே மே 1-ந்தேதி வரை அனைத்து வெளிநாட்டினரும் ரஷ்யா வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #RUSSIA #CORONAVIRUS