'கொரோனாவைக்' கொல்லும் 'புறஊதாக்கதிர் டார்ச் ...' 'மஹாராஷ்ட்ரா' மாணவர்களின் 'அசத்தல்' கண்டுபிடிப்பு... சிறந்த 'கிருமிநாசினியாக' செயல்படும் என்றும் 'விளக்கம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 15, 2020 03:44 PM

கொரோனா வைரஸைக் கொல்லக் கூடிய புறஊதாக் கதிர் டார்ச் லைட்டுகளை மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

Invention of Ultraviolet Torch, which kills corona virus

புற ஊதாக்கதிர்கள் என்றாலே ஓசோன் படலத்தை பாதிக்கும் தீய கதிர்கள் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இப்போது வரையிலும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இதற்கு, கிருமிகளை அழிக்கும் பண்பு உள்ளது. புற ஊதாக் கதிர்கள், தரவாரியாக 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏ மற்றும் பி ஆகிய இரண்டும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தீங்கானவைதான். ஆனால் 'சி' பிரிவு புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை மனிதர்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர் கீபோர்டுகள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றின் மேல்புறத்தில் இருக்கும் புறக்கிருமிகளை அழிக்கப் பயன்படுகிறது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த மாணவர்களான அனிகெட் மற்றும் பூணம் ஆகியோர் இக்கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக்கருவி பார்ப்பதற்கு டார்ச் லைட் போல இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் 16-33 வாட்ஸ் திறனுள்ள ஒளியின் மூலம் வைரஸைக் கொல்ல இந்த டார்ச்சைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டார்ச் லைட்களைத் பெருமளவு தயாரிக்கும் பொறுப்பை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாணவர்களின் ஆய்வு வழிகாட்டியான ஆர்.ஜி.சொன்காவடே, “புற ஊதாக்கதிர்களால் கிருமிநீக்கம் செய்யப்பட்ட காய்கறிகள் உண்பதற்கு உகந்தவைதான் என்பது நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டோம். புற ஊதாக்கதிர்கள் உணவுப் பொருட்களுக்குள் கலக்காது” என்றும் தெரிவித்தார்.