தினமும் சுடசுட ‘பிரியாணி’.. தாய் போல தெருநாய்களுக்கு ஊட்டிவிடும் பெண்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 15, 2020 12:37 PM

சென்னையில் உணவின்றி தவிக்கும் தெருநாய்களுக்கு தினமும் பெண் ஒருவர் பிரியாணி சமைத்து வழங்கும் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Chennai woman feeds biryani to stray dogs during corona lockdown

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த சாந்தி கடந்த சில ஆண்டுகளாகவே தான் வசிக்கும் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் என கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பக்கத்து தெருவில் உள்ள நாய்களுக்கும் சேர்த்து உணவு வழங்கி வருகிறார். காலையில் பிஸ்கட்டும், மாலையில் சிக்கன் பிரியாணியும் வழங்கி வருகிறார்.

சாதாரண நாட்களில் குப்பைகளில் கிடைக்கும் உணவு கூட தற்போது நாய்களுக்கு கிடைக்காததால் தான் பிரியாணி சமைத்து அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். தெரு நாய்களுக்கு உணவு வழங்குவது மட்டுமல்லாமல் குழந்தைக்கு தாய் உணவு ஊட்டி விடுவதுபோல அதை நாய்களுக்கு ஊட்டியும் விடுகிறார் சாந்தி. ஊரடங்கு சமயத்தில் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் இவரது மனித நேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News Credits: Polimer News